முன்னாள் அமைச்சர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கவேண்டும் : ஓபிஎஸ்

அரசியல்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும், தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை  தன் கடமையை தான் செய்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் உருவச்சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.

அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “பெரியார் முதல் ஜெயலலிதா வரை அரசியலில் பயணித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த பொழுது, ஐநாவிற்கு சென்று இந்தியாவின் ஒற்றுமை பற்றி விளக்கமாக பேசியவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

அரசியல் காரணங்களுக்காக சிலர் பேசி வருகின்றனர். தொண்டர்களுக்காக, ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக.

இரண்டு முறை முதலமைச்சர் பொறுப்பை வழங்கினாலும் விசுவாசமிக்க தொண்டனாக தான் இருந்தேன்.

அதே நேரத்தில் தலைமையை தொண்டன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் வகுத்த வழி. அதன் வழியில் செல்ல வேண்டும் என்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் , “ முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்களை குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டும், தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை  தன் கடமையை தான் செய்கிறது” என்று பதிலளித்தார்.

கலை.ரா

சசிகலா பன்னீர் சந்திப்பு எப்போது? வைத்திலிங்கம் பதில்!

மணிவிழா காணும் காஞ்சீவர பாணி ! 

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.