நவம்பர் 21-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை கழகம் இன்று (நவம்பர் 8) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் நிர்வாக ரீதியாக உள்ள 82 மாவட்டங்களுக்கு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நவம்பர் 21-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பொதுச்செயலாளர் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்!
தொகுதி மாறுகிறேனா? திருமா பதில்!