அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (நவம்பர் 21) நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதிமுகவில் நிர்வாக ரீதியாக உள்ள 82 மாவட்டங்களுக்கு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், “நவம்பர் 21-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பொதுச்செயலாளர் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. குறிப்பாக மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதற்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தசூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
Bigg Boss 7 Day 50: மீண்டும் களமிறங்கும் வைல்டு கார்டு போட்டியாளர்கள்!
ஐந்து மாநிலத் தேர்தல்: பறிமுதல் செய்யப்பட்டது எத்தனை கோடி தெரியுமா?