அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (மார்ச் 9) காலை தொடங்கியது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதற்குக் காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்று டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 9 ஆம் தேதியான இன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான தோல்வி குறித்து எடப்பாடி மாவட்டச் செயலாளர்களுடன் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த சில நாட்களாக பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வரும் நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வர வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் பல மாசெக்கள் வெளிப்படையாக குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே பாஜகவுக்கு எதிராக கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ போன்றவர்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். இந்த கூட்டத்திலும் இவர்கள் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாகவும், பொதுச்செயலாளர் தேர்தல் குறித்தும் இன்று மாசெக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் , முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மோனிஷா
IND VS AUS: 4வது டெஸ்ட்…நேரில் கண்டு ரசித்த பிரதமர்கள்!
வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் சூழ்ச்சி : முதல்வர்!