அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் ரூ.400 கோடி ஊழல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யக்கோரி அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி ஜாமீனில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியே வந்தார்.
அதனையடுத்து மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீண்டும் அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “2021 முதல் 2023ம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் வாங்குவதற்கு, ரூ.1,182 கோடி மதிப்பில் 10 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றாததால், அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஜாமீனில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு, அதிமுகவின் இந்த புகார் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சசிகுமாரின் ’நந்தன்’ : ஓடிடியில் நிகழ்த்திய அபார சாதனை!
மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக ED சோதனை!