மதுரை அதிமுக மாநாட்டு மேடையில் தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 5-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுரை அதிமுக மாநாட்டிற்கான இலச்சினை அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
இலச்சினையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் சம அளவில் இடம் பெற்றிருந்தது. அண்ணாவின் படம் மேல் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த இலச்சினை வடிவமைப்பின் போது தந்தை பெரியாரின் படத்தையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அண்ணா படத்தோடு பெரியார் படத்தையும் சேர்த்து அச்சிட்டால் பாஜகவுக்கு நாம் உறுதியான மெசேஜ் கொடுக்கும் வகையில் இருக்கும் என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த லோகோவில் பெரியார் படம் இடம்பெறுவதை தவிர்த்திருந்தார்.
இந்தநிலையில் மதுரை அதிமுக மாநாடு நடைபெறும் மேடையில் தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது. இலச்சினையில் பெரியார் படத்தை தவிர்த்த எடப்பாடி பழனிசாமி மதுரை அதிமுக மாநாட்டில் பெரியார் படத்தை இடம் பெற வைத்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
மோடி வீட்டு வாசலில் போராட்டம்: எடப்பாடியை அழைக்கும் உதயநிதி
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை: அதிமுக மாநாட்டில் தீர்மானம்!