மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் துப்பாக்கி பட ஸ்டைலில் அவரை அதிமுக வேட்பாளர் வரவேற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பாஜக தமிழ்நாட்டில் போட்டியிடுபவர்களின் 9 பேர் கொண்ட பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ஜி ராமச்சந்திரன் போட்டியிடுகின்றனர்.
பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமடங்களிலேயே, அந்த பட்டியலில் அண்ணாமலையின் பெயரை சிவப்பு நிறத்தில் சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன்.
அதோடு தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் துப்பாக்கி பட ஸ்டைலில், I am waiting என அண்ணாமலையை டேக் செய்துள்ளார்.
திமுக சார்பில் கோவையில் இன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தேர்தல் முடிந்தவுடன் பிரியாணி போடலாம் என்று சொல்லியிருந்தோம், இப்போதுதான் செய்தி கிடைத்தது. சுவையான மட்டன் பிரியாணி ரெடி என்று விமர்சித்துள்ளார்.
அதேசமயம் தன்னை வேட்பாளராக தேர்வு செய்ததற்கு மோடி, அமித்ஷா, நட்டா ஆகிய பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அண்ணாமலை இம்முறை 400 தொகுதிக்கும் மேல் கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நெல்லையில் நயினார் நாகேந்திரன்: வேட்பாளர் பட்டியல் மாற்றம்!
உச்சநீதிமன்றத்தின் குட்டு… பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர்