அதிமுக பொதுக்குழு தீர்ப்பு 10.30க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 10 மணியில் இருந்தே எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்களும், பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர்.
இவர்களுக்கு இணையாக பத்திரிகையாளர்களும் தீர்ப்பை எதிர் நோக்கி திரண்டனர். நீதிபதி ஜெயச்சந்திரன் 10.30 வரை நீதிமன்றத்துக்கு வரவில்லை. 10.40 மணியளவில் நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி ஜெயச்சந்திரன் தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
இதையடுத்து தீர்ப்பு எப்போது என அனைத்து தரப்பினரும் காத்திருந்த நிலையில், 11.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என வழக்கு சம்பந்தப்பட்ட ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மூலம் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு இந்த தகவல் பாஸ் செய்யப்பட்டது. ஏன் தாமதம் என்று இருவரும் விசாரித்துள்ளனர்.
‘தன் அறையில் அமர்ந்த நீதிபதி தீர்ப்பில் சில திருத்தங்களை செய்து வருவதாகவும், அதை இறுதி வடிவத்துக்கு கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றும் அதனால் 11.30 மணிக்கு தீர்ப்பு வாசிக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றும் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சீனியர் பத்திரிகையாளார்களும் உறுதி படுத்தியுள்ளனர்.
பிரியா