தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு அமைத்த உண்மை சரிபார்ப்பு குழு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 6) வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மை தன்மையை சரிபார்க்க உண்மை சரிபார்ப்பு குழுவானது அக்டோபர் 6-ஆம் தேதி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. உண்மை சரிபார்ப்பு பிரிவின் திட்ட இயக்குனராக ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு எதிராக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிசார்ப்பு குழுவானது பொதுமக்கள் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சியாகும். ஆளும் கட்சி ஆதரவாளரான ஐயன் கார்த்திகேயனை திட்ட இயக்குனராக அரசு நியமித்துள்ளது.
எனவே தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்பு அரசாணைக்கும் திட்ட இயக்குனராக ஐயன் கார்த்திகேயன் செயல்படவும் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மெயில் ஐடி இருக்கா? வாட்ஸ்ஆப் லாக்இன் செய்யலாம்!
மசோதாக்களை ஆளுநர்கள் இழுத்தடிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!
உண்மையை சரிபார்ப்பது எப்படி ‘பொது மக்களுடைய ‘ கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் ? சரி ! நீதிமன்றத்தின் முடிவினை எதிர் நோக்குவோம்.