திருச்சியில் இன்று (ஏப்ரல் 24) நடைபெறும் முப்பெரும் மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்கினர்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்தது.
இந்தநிலையில் சட்ட நடவடிக்கைகளால் சோர்ந்து போன ஓ.பிஎஸ் தரப்பினர் மக்கள் மன்றத்தை நாடுவது என முடிவெடுத்து முப்பெரும் விழா நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி திருச்சியில் இன்று முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. விழா நடைபெறும் இடத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார். அவரை வரவேற்பதற்காக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. இந்த மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது.
செல்வம்
ஓபிஎஸ் மேல்முறையீடு: ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
பாஜக பூஜ்யமாக வேண்டும்: நிதிஷ் சந்திப்புக்கு பின் பேசிய மம்தா