விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 15) அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது.
இந்தநிலையில், 2009-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அப்போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, இடைத்தேர்தலை புறக்கணித்தார். ஜெயலலிதா எடுத்த முடிவை முன்னுதாரணமாக கொண்டு இடைத்தேர்தலை புறக்கணிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்று ஜூன் 13-ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் விக்கிரவாண்டி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆணவக் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
4 மாவட்ட கடல்களுக்கு எச்சரிக்கை… தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்?