அதிமுக- பாஜக -நாதக மறைமுக கூட்டணி : திருமாவளவனுக்கு ஜெயக்குமார் பதில்!

Published On:

| By Kavi

Jayakumar reply to Thirumavalavan

அதிமுக – பாஜக – நாதக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக திருமாவளவன் கூறியிருந்த நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். Jayakumar reply to Thirumavalavan

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரகுமார் பதவி ஏற்பு விழா இன்று (பிப்ரவரி 19) தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சியான விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.

சந்திரகுமாருக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்த போது, பொதுப்பணி மற்றும்நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிமுகவை விழுங்கும் பாஜக Jayakumar reply to Thirumavalavan

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அதிகமாக தலையிட முடியாது. அதிமுக பலவீனப்பட்டு விடக்கூடாது என்பது எனது கருத்து. காரணம், அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி சங்பரிவார் இங்கே கால் ஊன்ற முயல்கிறது.

இப்போதும் திமுகவை விட அதிமுகவை குறிவைத்து காய்களை நகர்த்துகிறார்கள் என்பதை அதிமுக உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதிமுக பலவீனப்படுத்த பாஜக இங்கே உண்மையான எதிர்க்கட்சியாக வளரும் என்று நம்புகிறது. அதிமுகவை வீழ்த்தவும், நீர்த்துப்போகவும் பாஜக செய்கிறது.

இந்த உண்மையை அதிமுக புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் இதை சுட்டிக்காட்டுகிறேன். இதை தவிர அதிமுக மீது எந்த காழ்ப்புணர்வும் இல்லை.

ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும். ஒரு இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயங்குகிறார்கள் என்றால், அந்த கட்சியின் மீதான நம்பகத்தன்மை மக்களிடையே குறைவும்.

எனவே அதிமுகவை விழுங்கி பாஜக செரிக்க பார்க்கிறது என்று தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

மறைமுக கூட்டணி! Jayakumar reply to Thirumavalavan

திருமாவளவன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக போட்டியிடாமல் பின்வாங்கியது. பாஜகவும் அதே நிலைபாட்டை எடுத்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க விரும்பாமல், இவ்விரு கட்சிகளும் இணைந்து நாதகவுக்கு ஆதரவை நல்குவது என்னும் மறைமுக உடன்பாடு செய்துகொண்டனரோ என்ற ஐயத்தை எழுப்புகிறது.

அதாவது, நாதக மற்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவுக்கு வெளிப்படையான வெறுப்பு அரசியலை நாதக முன்னெடுத்தது. அதை அதிமுக கண்டும் காணாமல் கடந்து சென்ற போக்கு அதிர்ச்சியளித்தது. அதேவேளையில், பாஜக வரிந்து கட்டிக்கொண்டு நாதகவின் வெறுப்பு அரசியலை வரவேற்றது.

இவ்விரு கட்சிகளின் இந்தப் போக்கு அவர்களுக்கிடையிலான மறைமுக உடன்பாட்டை உறுதிப்படுத்துவதாகவே விளங்குகிறது” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சார் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

திசை திருப்பும் திருமாவளவன் Jayakumar reply to Thirumavalavan

இதற்கு அவர், “எங்களை பொறுத்தவரை மறைமுக கூட்டணி வைப்பதற்கு அவசியம் இல்லை. நாங்கள் எப்போதும் ’வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு’ என்ற அடிப்படையில் தான் செயல்படுவோம். பாஜகவை மனதில் வைத்துதான் நீங்கள் சொல்கிறீர்கள். கூட்டணி எந்த காலத்திலும் இல்லை என்று எப்போதோ முடிவெடுக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் தலித்துகள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகுகின்றனர். உதாரணமாக நெல்லையில் ஒரு மாணவரும், ஒரு மாணவியும் கத்தி குத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதை எதிர்த்து அறிக்கை விட்டதோடு நிறுத்திக்கொண்டார் திருமாவளவன்.

தலித் மக்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று வெளிப்படையாக திருமாவளவன் சொல்லவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை முதல் பல பிரச்சினைகளை மறந்துவிட்டு பேசுகிறார்.
தலித்துக்காக இருந்த விசிக இப்போது திசை மாறி போகிறதே என திருமாவளவன் உடன் இருப்பவர்களே சொல்கிறார்கள். இதையெல்லாம் திசை திருப்பவே திருமாவளவன் இப்படியெல்லாம் சொல்கிறார். அதைதவிர நாங்கள் யாருடனும் மறைமுக கூட்டணியில் இல்லை” என்று பதிலளித்தார். Jayakumar reply to Thirumavalavan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share