அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன் பேசியதற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் நேற்று (டிசம்பர் 17) செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக இருக்கிறது. பாஜக கூட்டணியில் இணைந்தால் தான் அதிமுகவுக்கு எதிர்காலம் உண்டு. இல்லையென்றால் அழிந்துவிடும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, “கூட்டணிக்கு நேரமும் காலமும் இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஒழிக்கப்பட வேண்டும். அப்படியானால் எல்லாம் ஒன்றாக சேர்ந்தால்தான் ஒழிக்க முடியுமா? இல்லை கூட்டணியை வலிமைப்படுத்தினால் ஒழிக்க முடியுமா? எல்லாமே சாத்தியம்தான்” என்று சூசமாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 18) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜக கூட்டணியை பொறுத்தவரை… நேற்றும் இல்லை… இன்றும் இல்லை… நாளையும் இல்லை… என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்திவிட்டார்.
டிடிவி தினகரனை பொறுத்தவரை தன்மானத்தை விட்டு, வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாஜகவில் சரண்டராகிவிட்டார்.
அதிமுக என்பது தன்மானத்தோடு இயங்கிற இயக்கம். டிடிவி தினகரன் போல எங்களுக்கு யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் கிடையாது.
பொதுச்செயலாளர் எடுத்த நிலைபாட்டில் மாறுபாடு இல்லை” என்று பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
’15 வருட காதலை உடைக்க விரும்பவில்லை’ – கீர்த்தி திருமணம் குறித்து தந்தை
Comments are closed.