aiadmk bjp alliance in tamilnadu

அதிமுக – பாஜக கூட்டணி: அமித்ஷா சொன்னது என்ன?

அரசியல்

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. நிர்வாகிகள் சில பேர் பாஜகவை விட்டு வெளியேறி கூட்டணிக் கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற விவாதங்கள் எழுந்தது.

இந்நிலையில், தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மார்ச் 17 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மண்டபத்தில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போய் விடுவேன்” என்று பேசியிருந்தார்.

தேசிய கட்சியான பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை இவ்வாறு பேசியது பெரும் பேசுபொருளானது.

ஆனால் அதிமுக பாஜக கூட்டணியில் பிளவு கிடையாது என்ற விளக்கமும் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து மார்ச் 23-ஆம் தேதி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பின்னர் அண்ணாமலை, “அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை.

தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்கும்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் நெட்வொர்க் 18 குழுமம் சார்பில் தி ரைசிங் இந்தியா என்ற நிகழ்வு நேற்று (மார்ச் 29) நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், நிதின்கட்கரி, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், பாஜக அதிமுக கூட்டணி குறித்து நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி கேள்வி கேட்டார்.

இந்த கேள்விக்குப் பதிலளித்த அமித்ஷா, “தமிழ்நாட்டில் பாஜக கட்டமைப்பு வலுவின்றி உள்ளது.

அதை சரிப்படுத்த கடுமையாக உழைத்து வருகிறோம். அதில் முன்னேற்றமும் கண்டுள்ளோம்.

தொலைதூர கிராமங்களையும் வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது. எங்கெல்லாம் பாஜக வலுக்குறைந்துள்ளதோ, அங்கு எங்களது கூட்டணிக் கட்சிகள் கைகொடுக்கும்.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்” என்று திட்டவட்டமாக கூறினார்.

இதன்மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் பிளவு இல்லை என்பதை அமித்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

மோனிஷா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வந்தே பாரத் ரயில்: கல் வீசினால் சிறை தண்டனை!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை எதிர்த்து… ஓபிஎஸ்-டிடிவி- சசிகலா முக்கோணக் கூட்டணி சாத்தியமா?

aiadmk bjp alliance in tamilnadu
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *