|

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : தேஜஸ்வி யாதவ் கருத்து!

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் தேசிய ஜனநாயக கூட்டணி அர்த்தமற்றதாகிவிட்டது என்று பீகார் துணை முதல்வரும் ராஸ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஏ.என்.ஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இந்த கூட்டணி முறிவு என்பது அவர்களது முடிவு. இதைப் பற்றி நான் அதிகம் சொல்ல முடியாது.

தமிழகத்தில் திமுக பலமாக உள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி பலமாக உள்ளது.

சில நாட்களுக்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர்களிடம் அஜெண்டா இல்லை.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டாளி கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறது. இது பாஜகவுக்கு பெரும் இழப்பு என்று நினைக்கிறேன்.

கூட்டணியிலிருந்து சிவசேனா, ஜேடியு, அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே வெளியேறிவிட்டன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்போது அர்த்தமற்றது என்பதை இந்த கூட்டணி முறிவு தெளிவாகக் காட்டுகிறது. ஒரே ஒரு சர்வாதிகாரி உட்கார்ந்து இரண்டு பேர் நாட்டை நடத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக இன்று (செப்டம்பர் 25) மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மா.செ.க்கள் கூட்டத்தில் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரியா

அதிமுக பாஜக கூட்டணி முறிவு: சந்தேகம் கிளப்பும் அழகிரி

இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் செயல்படாது!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts