மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியைத் தக்கவைத்துள்ளன.
இந்நிலையில் தற்போது யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது தொடர்பாக மூன்று மாநிலங்களிலும் கவனம் திரும்பியுள்ளது.
நேற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளன.
மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்தன. ஆனால் பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். இதனால் தொங்கு சட்டசபை உருவானது.
இந்நிலையில் 2 இடங்களில் வென்ற பாஜக மற்றும் 11 இடங்களில் யுடிபி ஆகிய பழைய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது என்பிபி.
இந்நிலையில் 45 வயதான மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா இன்று (மார்ச் 3) மதியம் ராஜ்பவனுக்கு வந்து கவர்னர் பாகு சவுகானை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அவரது பதவியேற்பு விழா ஷில்லாங்கில் வரும் 7ம் தேதி நடைபெறும் எனவும், அதில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல பாஜகவை சேர்ந்த திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார்.
எனினும் அவர் உடனடியாக ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. இதனால் திரிபுராவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவுகிறது.
அங்கு மார்ச் 8-ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் உள்ள நிலையில் மாணிக் சாஹா தான் அடுத்த முதல்வராக தொடர்வார் என்று நம்பப்படுகிறது.
நாகலாந்தில் 25 இடங்களை வென்ற என்டிபிபி கட்சியின் தலைவர் 73 வயதான ரியோ ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: அமைச்சர் சி.வெ. கணேசன் மறுப்பு!
பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மக்கள்: வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய முதலமைச்சர்