Udhayanidhi organised a sudden meeting

மாநாடு முடிந்து… உதயநிதி கூட்டும் திடீர் இளைஞரணிக் கூட்டம்! எதற்காக?

ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடந்து முடிந்த நிலையில், இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு இளைஞர் அணி தலைமையிடம் இருந்து அவசரத் தகவல் ஒன்று சென்றிருக்கிறது.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுகவின் அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலைஞர் அரங்கத்துக்கு வர வேண்டும் என்பதுதான் அந்தத் தகவல்.

இது பற்றி திமுக இளைஞரணி வட்டாரத்தில் விசாரித்தோம்.

“நடந்து முடிந்த இளைஞர் அணி மாநாட்டுக்காக ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளரும் துணை அமைப்பாளர்களும் மற்ற நிர்வாகிகளும் கடந்த சில மாதங்களாகவே கடுமையாக உழைத்தார்கள். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஒவ்வொரு மாவட்டமாக சென்று செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியதோடு மாநாடு குறித்த ஏற்பாடுகளை தொடர்ந்து கேட்டறிந்து வந்தார்.

மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்ட நிலையில், மாநாட்டு மேடையில் ஒவ்வொரு இளைஞரணி நிர்வாகியையும் தனித்தனியாக உதயநிதியால் சந்திக்க இயலவில்லை. இதனால்,  இளைஞர் அணியின் ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளரையும் துணை அமைப்பாளர்களையும் சென்னைக்கு அழைத்து அனைவருக்கும் நினைவுப் பரிசு அளித்து கௌரவப்படுத்த முடிவெடுத்துள்ளார். அதற்காகவே ஜனவரி 26 ஆம் தேதி மாலை கலைஞர் அரங்கத்திற்கு அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாநாட்டில் உதயநிதி பேசும்போது, ‘இளைஞரணி நிர்வாகிகளுக்கு கட்சியில் பொறுப்புகள் தரவேண்டும், வரும் தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்று முதல்வருக்கு வெளிப்படையாக வேண்டுகோள் வைத்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு எந்த வகையில் தயாராக வேண்டும் என்பதையும் இந்த கூட்டத்தில் உதயநிதி விளக்க இருக்கிறார்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

INDvsENG : பாகிஸ்தான் வம்சாவளி வீரருக்கு வந்த சிக்கல்… ஸ்டோக்ஸ் விரக்தி!

இந்தியாவில் அறிமுகமானது Hero Xtreme 125R… கலர், விலை, சிறப்பம்சங்கள் என்ன?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts