தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு!

Published On:

| By Selvam

மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என்று உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 20) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

18-வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாது. இந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் தங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், “மத்திய சென்னையில் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட தொகையை விட தயாநிதி மாறன் அதிகமாக செலவு செய்துள்ளார். எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மைக்ரோசாப்ட் பிரச்சனை: இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை!

துணை முதல்வர் பதவி: முதல்வர் கையில் முடிவு… உதயநிதி பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share