ADMKs victory on the basis of symbol

வெற்றிக்கு அடிப்படை சின்னம்தான்: ஜி.கே.வாசன் பேட்டி!

அரசியல்

சின்னத்தின் அடிப்படையிலேயே அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதுதான் எங்களது கருத்து என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனுக்கு புதுக்கோட்டை அடுத்த இச்சடி பகுதியில் அக்கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன், கூட்டணியில் முதன்மை கட்சியாக உள்ள அதிமுகவிடம் கலந்து பேசி இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல முடிவை எடுத்தோம்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் ஒரு வெற்றி முடிவை எடுத்துள்ளோம். ஏற்கனவே உள்ள எங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்.

இரண்டு நாள் பொறுத்திருந்தால் நல்ல செய்தி வரும். இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். திமுக மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது.

அதனால் 100 சதவீதம் தமிழ்நாடுடைய முதன்மை கட்சி அதிமுகதான். அதன் தலைமையிலே இடைத்தேர்தலிலே வெற்றி பெறுவதற்காக வியூகத்தை ஏற்படுத்தி உள்ளோம்.

அந்த வியூகம் வெற்றி வியூகமாக அமையும். இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் தமாகாவின் முடிவு எங்களுடைய வருங்கால வளர்ச்சிக்கு அடித்தளம் என்று நாங்கள் நம்புகிறோம்.

பாஜக எங்களோடு இருப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு அவர் கட்சிக்கு உயர்வை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். கண்டிப்போடு செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். என்னைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார், சின்னமும் எங்களுக்கு கிடைக்கும்.

சின்னத்தின் அடிப்படையிலேயே வெற்றி பெறுவார் என்பதுதான் எங்களது கருத்து. ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எங்களது கூட்டணியை எதிர்த்து நின்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

நாங்கள் நிறுத்தக்கூடிய வேட்பாளர் பலமான வேட்பாளராக மண்ணின் மைந்தராக இருப்பார்.

மேலும் திமுகவுக்கு உள்ள எதிர்மறை ஓட்டு மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. அதுவே எங்களுக்கு வெற்றியின் அடித்தளமாக அமையும் என்று தெரிவித்தார்.

கலை.ரா

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு?

ஸ்டாலின் விருப்பம் தேர்தலில் போட்டி: இளங்கோவன் பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *