ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வேக வேகமாகக் கிளம்பினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து வருகிறது.
இதனால் இனிப்புகள், வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர் திமுகவினரும், காங்கிரசாரும்.
தற்போது வரை நான்கு சுற்று முடிவுகளைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
அதன்படி, காங்கிரஸ்- 31,884
அதிமுக -10,747
தேமுதிக – 431
நாம் தமிழர் கட்சி – 2,664 வாக்குகளைப் பெற்றுள்ளன.
இன்று காலை சித்தோடு அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு முதல் ஆளாக வருகை தந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு, தான் பின்னடைவைச் சந்தித்து வரும் வேளையில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வேக வேகமாக புறப்பட்டு தனது காருக்குச் சென்றார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்காமல், பணநாயகம் வென்றுவிட்டது, ஜனநாயகம் தோற்றுவிட்டது. அவ்வளவுதான் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
அதே சமயம் முதல்வர் ஸ்டாலினின் 21 மாத ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த வெற்றி என திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
பிரியா
மெஸ்ஸி ஆர்டர் செய்த ’கோல்ட் ஐபோன்ஸ்’: இணையத்தில் வைரல்!
“தேர்தல் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை”: இளங்கோவன்