admk symbol at risk of being disabled

இடைத்தேர்தலால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம்?

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்து போடவில்லை என்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுவில் எழுந்த ஒற்றை தலைமை சர்சையால் கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜூலை 11 ம் நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடுத்த வழக்கில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக அமைந்தாலும், இரு நீதிபதிகள் அமர்வில் பொதுக்குழு செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 4 ம் தேதி திமுக  கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடல்நிலை குறைவின் காரணமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகுவிற்கு கடிதம் எழுதினார். இதன் பின்பு சாகு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதற்கான அறிக்கையும் அனுப்பி வைத்தார்.

இந்த சூழலில் இன்று மேகாலாயா,நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் வெளியிடப்பட்டது.

அதிமுக சார்பாக கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சியாக போட்டியிட்ட ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் மீ்ண்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி அதிமுக சார்பாக போட்டியிட்டால் தேர்தலில் போட்டியிட கூடிய பி விண்ணப்பத்தில்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்து இடவேண்டும்.

ஆனால் , அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி சொல்லி வரும் நிலையில் இருவரும் சேர்ந்து கையெழுத்து இட வாய்ப்பில்லை என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அப்படியென்றால் இரட்டை இலை  சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்குவதற்கும் வாய்ப்புண்டு.  நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் சுழலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே இடைத்தேர்தல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

கலை.ரா

சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

பணி நீக்கம் அச்சத்தில் 10,000 மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *