admk support

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!

அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை கொண்டு வருவது தொடர்பாக சட்ட ஆணையத்தை மத்திய அரசு அணுகியது. சட்ட ஆணையமும், பொதுமக்கள், அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு வருகிறது.

அந்த வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்துக்களை கேட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய சட்ட ஆணையம் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது.

ஜனவரி 16ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் அதிமுக தரப்பிலிருந்து தற்போது இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அதன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதேசமயம் தமிழ்நாட்டில் இருக்கும் பிற கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தங்கள் நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

பகுதி நேர ஆசிரியர்கள்: பணி நிலைப்பும் இல்லை, பொங்கல் போனஸும் இல்லை – அன்புமணி ராமதாஸ்

உதயநிதியை கண்காணித்து வருகிறேன்: மு.க. ஸ்டாலின்

+1
1
+1
2
+1
1
+1
1
+1
4
+1
0
+1
0