பொதுக்குழுத் தீர்மானங்கள்: டெல்லிக்கு பறந்த சி.வி. சண்முகம்

politics அரசியல்

கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று சி.வி.சண்முகம் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை வானகரத்தில் கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி நியமனம், நிரந்தர பொதுச் செயலாளர் பதவி ரத்து, ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்தில் நியமனம், மாற்றம், விதிகள் திருத்தம் உள்ளடக்கிய, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு மின்னஞ்சல் மூலமாக தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனுதாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 13) டெல்லி சென்ற அதிமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான சி.வி. சண்முகம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு நேரில் சென்று தாக்கல் செய்துள்ளார். அத்துடன் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஓபிஎஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பொதுக்குழு கூட்டத் தீர்மானங்களை நேரில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற நடவடிக்கையில் இபிஎஸ் தரப்பு இறங்கியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தை ஏற்கனவே ஓபிஎஸ் சும் அணுகியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

கிறிஸ்டோபார் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.