தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பாக சென்னையில் போராட்டம் நடத்தப் படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று(செப்டம்பர் 24) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணிச் செயலாளருமான பா.வளர்மதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, “கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்களின் பயன்பாட்டால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நீடித்து வருகிறது.
ஆனால், திமுக அரசு இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் அதிமுக மகளிர் அணி நடத்தும் இந்த போராட்டம் மூலமாகத் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார்.
திருச்சி முக்கொம்பில் 17 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் வடமதுரையில் 15 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. விருகம்பாக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பாதுகாப்புப் பணிக்குச் சென்ற பெண் காவலரிடம் திமுக உறுப்பினர் அத்துமீறியிருக்கிறார். இப்படி தினமும் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு எதிரான இந்த மாதிரி நிகழ்வுகள் முடிவுக்கு வர வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” என்றார் முன்னாள் அமைச்சர் வளர்மதி.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர்களான சசிரேகா , மற்றும் அப்சரா ரெட்டி, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா, அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம், உட்படப் பல நிர்வாகிகள் திமுக அரசைக் கண்டித்து உரையாற்றினர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… “ஏமாற்றம் இருக்காது” – ஸ்டாலின் பேட்டி!
லெபனான் மக்கள் மீது பரிவு காட்டும் இஸ்ரேல் பிரதமர்: வீடியோ வெளியிட்டு விளக்கம்!
Comments are closed.