Panneer selvam explanation in the Edappadi case

“உத்தரவை மீறவில்லை”: எடப்பாடி வழக்கில் பன்னீர் விளக்கம்!

அரசியல்

அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மீறவில்லை என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து  நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

இதை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி, லெட்டர் பேடை பயன்படுத்துவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி என்.சதீஷ்குமார்,

அதிமுக கட்சியின் பெயர், கொடி, லெட்டர் பேடை பயன்படுத்தப் பன்னீர் செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு  மீண்டும் இன்று (டிசம்பர் 11) விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கெளதம்குமார், “பன்னீர் செல்வத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டிக்க வேண்டும்” என வாதிட்டார்.

பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், “ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை.

அதனால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும். தற்போது வரை நாங்கள் தனி நீதிபதியின் இடைக்காலத் தடை உத்தரவை மீறவில்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விடுதலை படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு?… உடைத்து பேசிய வெற்றிமாறன்!

“த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்கனும்” : மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் கேள்வி!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *