சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயில் தொண்டர்கள் வருகைக்காக இன்று (ஆகஸ்டு 21) காலைஒ 10.30 மணிவாக்கில் திறக்கப்பட்டது.
அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் ஒரு மாதம் வரக்கூடாது என்று ஜூலை 20-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,
நேற்றுடன் ஒரு மாத காலம் முடிவடைந்ததால் அதிமுக தலைமை அலுவலக நுழைவு வாயில் தொண்டர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் திறக்கப்பட்டபோதும் நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தொண்டர்கள் யாரும் உடனடியாக வரவில்லை.