அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

அரசியல்

அதிமுக அலுவலக வழக்கை விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது இபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்புக்கும் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் கட்சி அலுவலகம் வருவாய்த் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அதேநேரத்தில் இவ்வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்த நிலையில்,  இன்றைய தினம் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

“வழக்கு விசாரணை தொடங்கியதும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அலுவலக அதிகாரம் எங்களிடம் உள்ளது. அதிமுக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது” என பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் தீர விசாரித்த பின்னரே எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும் என  கூறியதுடன் வழக்கை ஒரு வாரத்திற்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக்கூறி ஒத்தி வைத்தார்.

அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீர் வைத்த அவசர கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.