அதிமுக செயற்குழு கூட்டமும் ரத்து!

Published On:

| By christopher

வரும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சி தலைமை இன்று(ஏப்ரல் 4) அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக செயற்குழு கூட்டம்‌ 7.4.2023 அன்று நடைபெறும்‌ என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஒரு சில காரணங்களால்‌, 7.4.2023 – வெள்ளிக்‌ கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த கழக செயற்குழு கூட்டம்‌ ரத்து செய்யப்படுகிறது என்பதைத்‌ தெரிவித்துக் கொள்கிறோம்‌.

கழகப்‌ பொதுச்‌ செயலாளர்‌, சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவரும், தமிழ்‌நாடு முன்னாள்‌ முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பதில் செயற்குழு கூட்டம் வரும் 7ம் தேதி நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டங்கள் அடுத்தடுத்து ரத்தானதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஒரே நாளில் உச்சம்: உச்சி கொட்ட வைத்த தங்கத்தின் விலை!

அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை: அரசு கவனிக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel