மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்ததை அடுத்து அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததும், இருகட்சியினரும் ஒருவரையொருவர் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய 5 முன்னாள் அமைச்சர்கள் இன்று (செப்டம்பர் 22) டெல்லி சென்றனர்.
அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டும் அவர் நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் அதிமுக நிர்வாகிகள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசினர்.
அப்போது, அண்ணாமலையின் பேச்சுக்கள் கூட்டணியின் வலிமையை குறைக்கும் என்றும், அவரை தலைமை கண்டிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளனர்.
அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் ஜெ.பி.நட்டாவின் இந்த முக்கிய சந்திப்பு அவரது இல்லத்தில் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆந்திராவின் விஜயகாந்த்… யார் இந்த பாலகிருஷ்ணா?