பன்னீர் வீடு: கொள்ளைபோன டிவி!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணைவீடு, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் அமைந்து உள்ளது.

இந்தப் பண்ணை வீட்டின் கீழ் உள்ள இரண்டு அறைகள் பார்வையாளர்கள் மற்றும் முக்கிய நபர்களை சந்திப்பதற்காக உள்ளது. அந்த வீட்டின் மாடியில் ஓ.பன்னீர்செல்வம் ஓயவு எடுப்பதற்காக ஓர் அறை உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு (அக்டோபர் 15) அந்தப் பண்ணை வீட்டின் பின்புறம் உள்ள சுவரின் வழியாக ஏறிக் குதித்த கொள்ளையர்கள்,

பன்னீர்செல்வம் ஓய்வு எடுக்கும் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பீரோவை உடைத்துள்ளனர்.

அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால், ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் அந்த அறையில் இருந்த 54 இன்ச் டிவியை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று (அக்டோபர் 15) காலையில் வழக்கம் போல பாதுகாவலர்கள் சென்ற போது மேல் மாடியில் அறை உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் முதல்வரின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரியகுளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.பிரகாஷ்

சத்யா கொலை: விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

இது டெல்லியில் நடக்க வேண்டிய போராட்டம்தான்:   உதயநிதி பேச்சு பின்னணி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts