அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று (ஜனவரி 4) பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான வைரமுத்து உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தானே?. இந்த மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசரத்தை அறிய விரும்புகிறோம் என நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ஹிரிஷிகேஷ் ராய் கேள்வி எழுப்பினர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்ற விசாரணை காரணமாகக் கட்சி பணிகள் தேக்கமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஈபிஎஸ், ஓபிஎஸ் என குறிப்பிட்டு வாதத்தை முன் வைத்தனர். அப்போது, அதென்ன ஓபிஎஸ் ஈபிஎஸ் என நீதிபதிகள் அர்த்தம் கேட்க, அதற்கு எடப்பாடி பழனிசாமி சொந்த கிராம பெயரையும் இணைத்துள்ளார். இருவரும் பெயரை சுருக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என சிரித்துக்கொண்டே கூறியுள்ளனர்.
தொடர்ந்து வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
பிரியா
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ உயிரிழப்பு: ஈவிகேஎஸ் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்!
ஈவிகேஎஸ் மகன் திருமகன் ஈவெரா காலமானார்!