அதிமுக பொதுச்செயலாளருக்கு என்னென்ன அதிகாரங்கள்?

Published On:

| By Gracy

இன்று (ஜூலை 11) அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. இதில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் இன்று பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

அதிமுகவின் நிர்வாக ரீதியான அனைத்து பொறுப்புகளையும், நிர்வாகிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார்.

தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

துணைப் பொதுச்செயலாளரையும் , பொருளாளரையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு.

அவைத்தலைவர் , பொருளாளர் , தலைமைக்கழக நிர்வாகிகள் கொண்ட செயற்குழுவை பொதுச்செயலாளரால், மட்டுமே கூட்ட முடியும்.

செயற்குழு – பொதுக்குழுவை கூட்டுதல் , உட்கட்சி தேர்தலை நடத்துதல் , வரவு – செலவு கணக்குகளை ஆராய்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்வார்.

சட்ட விதிகளை மீறும் நிர்வாகிகளை நீக்குவதற்கோ – ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கோ பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம்.

பொதுக்குழு – செயற்குழு கூடாத நேரங்களில் நிகழ்ச்சிகள் , கொள்கை திட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு.

கட்சிக்காக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உண்டு.

அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவத்தில் கையெழுத்திட பொதுச்செயலாளருக்கு அதிகாரம் என அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share