அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 19) மதியம் 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் நாளில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் இதுவரை மொத்தம் 222 பேரிடம் இருந்து மனுத்தாக்கல் பெறப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து 221 பேர் எடப்பாடி பழனிசாமி பேரில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
இத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் வரும் 24-ம் தேதி வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி தரப்பு தீர்ப்புக்காக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இணையம் முடக்கம்… குவியும் ராணுவம்… பதற்றத்தில் பஞ்சாப்!
”ஸ்டாலின் முதல்வராக காரணமே நான் தான்” சீமான் அதிரடி!