அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது?: தேதி அறிவிப்பு!

அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் தேதி இன்று (மார்ச் 17) அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர் வைரமுத்து உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது.

இந்நிலையில் தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக எடப்பாடி பழனிசாமி செய்து வந்த நிலையில் இன்று (மார்ச் 17) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், “

அதிமுக கழக சட்டத்திட்ட விதி 20 (அ); பிரிவு -2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு “கழக பொதுச் செயலாளர்” கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் கீழ்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.

18/3/2023 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 19/3/2023.

21/3/2023 அன்று பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 26/3/2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 27/3/2023 திங்கள் கிழமை காலை 9 மணி முதல்  பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட கால அட்டவணைப்படி தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று அதனை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

இந்த தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

துணைப் பொதுச் செயலாளர் ராம விஸ்வநாதன் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பிரியா

ஸ்டாலின் உத்தரவு: திருச்சி சிவா வீட்டுக்கு சென்ற நேரு… நடந்தது என்ன?

உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லை?: பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.