அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி.
நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து சில நிமிடங்களில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுக்குழு தேர்தல் முடிவை கழக தேர்தல் அலுவலர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிவித்தனர்.
இதையடுத்து பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதற்கான சான்றிதழையும் தேர்தல் அலுவலர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அப்போது அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“பல்வேறு சோதனைகளுக்கு இடையில் இருபெரும் தலைவர்களின் கனவை நனவாக்குகிற வகையில் அதிமுக தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு இன்றைக்கு கழக தேர்தல் அலுவலர்கள் என்னை பொதுச்செயலாளராக அறிவித்துள்ளனர்.
இந்தசூழலில் அனைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது” என்றார்.
பிரியா
“அதிமுக இனி ஒரே அணி தான்:” கே.பி.முனுசாமி
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: ஓபிஎஸ் மேல்முறையீடு!