அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (மார்ச் 28) தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்தசூழலில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை கடந்த மார்ச் 22ஆம் தேதி நீதிபதி குமரேஷ் பாபு அவசர வழக்காக விசாரித்தார். அப்போது பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடையில்லை, ஆனால் முடிவை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டார்.
அதுபோன்று பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தர்ப்பு வாதங்களும் முடிந்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 27) தெரிவித்துள்ளது.
பிரியா