அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி

அரசியல்

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 28) தீர்ப்பு வழங்கியது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. அதனடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை என்றும் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தசூழலில் அதிமுக தலைமை, பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதியை வெளியிட்டது.

இதை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். அப்போது, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதி, வழக்கை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றையதினம் முழுவதுமாக வழக்கை விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்குவதாகவும் அதுவரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கு மார்ச் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் தரப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஒருவருக்காக கழக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் நிபந்தனைகளை நீக்கினால் நானும் தேர்தலில் போட்டியிட தயார். வழக்கை வாபஸ் பெற தயார் என்று வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், அதிமுகவில் வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகவில்லை. ரத்து செய்யப்பட்டது. தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது  என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 29) அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி குமரேஷ் பாபு.

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவையும் வெளியிட தடையில்லை என்று தீர்ப்பளித்தார். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி.

இதனால் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரியா

ஸ்காட்லாந்து புதிய பிரதமராகிறார் பாகிஸ்தான் வம்சாவளி!

ஒரு கல்லூரியும் சில தீரமிக்க இளைஞர்களும்…  இதோ ஒரு சமகால சரித்திரம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.