சென்னை வானகரத்தில் வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்குமாறு பொதுக்குழு உறுப்பினர்கள் 2,665 பேருக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் ’தலைமை கழக நிர்வாகிகள், தலைமை கழகம், எம்.ஜி.ஆர். மாளிகை, சென்னை என்ற முகவரியில் இருந்து அனுப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் எது போன்ற விவகாரங்கள் குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டும், முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தீர்மானங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளனர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam-uat.easyngo.com/wp-content/uploads/admk-logp.jpg)
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் .
கழக அமைப்பு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதம் செய்வது.
பொதுச் செயலாளர் கட்சியின் நிர்வாகிகளால் தேர்தல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இடைகால பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர் குறித்தும் விவதிக்க வேண்டும்.
இடைக்கால பொதுச்செயலாளர் யார்? என்ற தேர்வு குறித்தும் 11 அன்று நடக்கும் பொதுக்குழுவில் தீமானிக்க வேண்டும்.
பொதுச்செயலாளர் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை ஆலோசித்து அன்றைய பொதுக்குழுவில் முடிவெடுக்க வேண்டும்.
பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11 அன்று காலை 9.15 க்கு அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடக்கும் என்று அழைப்பு விடுக்கபட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணங்களால் திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்காமல் போகுமானால், காணொளி மூலமாக உறுப்பினர்கள் அனைவரும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும் என்று இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுகொண்டுள்ளார். தலைமை செயலகம் மற்றும் அந்தந்த மாவட்டத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து உறுப்பினர்கள் காணொளி மூலம் பங்கேற்கலாம் என தெரிவித்திருந்தார்.
பொதுக்குழுவை ரத்து செய்ய ஒ. பன்னீர்செல்வம் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் இந்நிலையில் ஒபிஎஸ் தரப்பில் இருந்த ஆதரவாளர்களில் 9 பேர் இபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மோனிஷா