விரைவில் அதிமுக பொதுக்குழு நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் தொண்டர்களைச் சந்தித்தப்பின் இன்று (நவம்பர் 18) செய்தியாளர்களிடம் பேசிய ஓ,பன்னீர் செல்வம் “அனைத்து மாவட்ட செயலாளர்கள கூட்டம் விரைவில் நடைபெறும். அதன்பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டத்தையும் உறுதியாக கூட்டுவோம்” என்றார்.
பன்னீர் செல்வத்தை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என தினகரன் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, “இது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்” என்று கூறினார்.
மேலும் தனியார் நிகழ்ச்சியில் அமித்ஷாவை சந்தித்ததால் அவருடன் அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் தினகரன் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டார் ஓ.பன்னீர்.
பிரியா
2 படங்களில் நடித்தால் கலைமாமணி விருதா? – உயர்நீதிமன்றம் கேள்வி
சசிகலா, தினகரன் எடப்பாடியை சந்திக்க வேண்டும்: செல்லூர் ராஜூ அழைப்பு!