தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இன்று (ஜூன் 15) சந்தித்து மனு கொடுத்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையில் சிக்கியிருக்கும் நிலையில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வசமிருந்த மின்சாரத்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஈரோடு முத்துசாமிக்கும் பகிர்ந்தளிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்திருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தசூழலில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ள முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின், சி.விஜயபாஸ்கர், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்ததாக பி.டி.ஆர் பேசியது போன்று வெளியான ஆடியோ விவகாரம் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடுமாறு அதிமுகவினர் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு : நீதிபதி முக்கிய அறிவிப்பு!