admk flag symbol case

ஓபிஎஸ் தரப்பில் விநோதமான வாதம்: இன்பதுரை

அதிமுக கொடி அதிமுகவிற்கே சொந்தமில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் விநோதமான வாதத்தை முன்வைத்ததாக இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். admk flag symbol case

அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற தனிநீதிபதி என்.சதீஷ்குமார் ஓபிஎஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வு தனிநீதிபதி விதித்த இடைக்காலத் தடை தொடரும் என்று உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். ஓபிஎஸ் மீண்டும் தனிநீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை,

”அதிமுகவின் கொடி, சின்னம், அலுவலக முகவரியை பயன்படுத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தனி நீதிபதி ஓபிஎஸுக்கு தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், அதிமுக கொடி என்பது அதிமுகவிற்கே சொந்தமில்லை என்று ஒபிஎஸ் தரப்பில் ஒரு விநோதமான வாதத்தை முன்வைத்தார்கள்.

அதிமுக அலுவலகம் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று ஒரு புதிய தகவலை தெரிவித்தனர். இது ஏற்கத்தக்கதல்ல, இவ்வாறு சொல்வதும் தவறு. ஏனென்றால் அதிமுகவின் அலுவலகத்தை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.

முதலில் பொதுக்குழுவை கூட்டக் கூடாது என்று ஒரு வழக்குப் போட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று தோற்றுவிட்டு வந்தார்கள்.

பின்னர் பொதுக்குழுவே தவறு என்றும் பொதுக்குழுவின் தீர்மானங்கள் தவறு என்றும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்குப் போட்டார்கள். இந்த வழக்கு வருகின்ற 19 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வரவிருக்கிறது.

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் என்று தேர்தல் ஆணையமே அங்கீகரித்த பின், அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது தவறு. அவ்வாறு பயன்படுத்துவதால் குழப்பம் ஏற்படுகிறது என்று தான் வழக்குப் போட்டோம்.

இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவு சரி என்று தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸுக்கு தடை தொடரும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நெருங்கும் பொங்கல்… தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை!

admk flag symbol case

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts