கே.பி.பி. பாஸ்கர் வீட்டு முன் காத்திருக்கும் தங்கமணி

அரசியல்

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறன்றனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அவரது வீடு முன் குவிந்துள்ளனர்.

நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா பெயரில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது அவரது வருமானத்தை விட 315% அதிகமாகும். அவர் மீது நாமக்கல் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு போலீசார் பல்வேறு பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

26 இடங்களில் சோதனை!

அதன்தொடர்ச்சியாக நாமக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பாஸ்கரின் நண்பர்களான சேகர், மயில் சுதந்திரம், லோகேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து வருகிறது.

குவியும் அதிமுக ஆதரவாளர்கள்!

இன்று அதிகாலை முதல் 5 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்ற தகவல் வெளிவரவில்லை. அதேவேளையில் கே.பி.பி பாஸ்கரின் வீட்டுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் காத்திருக்கின்றனர். மேலும் சுமார் 200க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அவரது வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கேபிபி பாஸ்கர் பின்னணி!

நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக அதிமுக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் கேபிபி.பாஸ்கர், இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். பாஸ்கருக்கு சொந்தமான வீடு மோகனூர் ரோட்டில், உள்ள கே.கே.நகரில் உள்ளது. இவருக்கு உமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
1
+1
2
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *