Thangamani suffered by dengue

டெங்கு பாதிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

அரசியல்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவோடு இரவாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. டெங்குவால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதனை தடுக்க அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழக அரசு சார்பாக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரம் மருத்துவ முகாம்களை அரசு  செயல்படுத்தி வருகிறது.

இதற்கிடையே தற்போது பெய்து வரும் கனமழையால் கொசுக்களின் இனப்பெருக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகளவு இருமல் காய்ச்சல் இருந்துள்ளது.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தங்கமணி சென்னையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது உடல்நிலையை பிரசோதனை செய்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னை மெட்ரோ பணியிடங்களில் மழைநீர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

குறைந்த விலையில் ஆன்லைன் பட்டாசு: சைபர் க்ரைம் எச்சரிக்கை!  

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *