எதையும் கண்டுகொள்ளாத மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று (ஏப்ரல் 4) கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு மதுரை அரசரடி ரவுண்டானாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசினார். அவர் பேசுகையில், “மதுரை பகுதி வளர்ச்சியடையும் என்று நினைத்து மதுரை மக்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் குப்பைக்கூளம் நிறைந்த மாநகராட்சியாக, எதையும் கண்டுகொள்ளாத மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி உள்ளது.
மக்களின் எதிர்ப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் திமுக மாமன்ற உறுப்பினர்களே நேற்று மாமன்ற கூட்டத்தொடரில் தங்களுடைய குரலை ஒலித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இராமலிங்கம்
காங்கிரஸ்-பாஜக கடும் மோதல் : 13 பேர் கைது!
பாரதி ராஜாவின் மார்கழி திங்கள்: கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்!