நில அபகரிப்பு வழக்கில் மாஜி மந்திரி!

அரசியல்

வயதான தம்பதியின் நிலத்தை அபகரித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் உதகை நிதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 16) சரணடைந்தார்.

கடந்த 2011-16 ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் புத்திசந்திரன். இவர் நீலகிரி மாவட்டம் மணிக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜு அவரது மனைவி பிரேமாவுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் இருந்து 15 சென்ட் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 28ம் தேதி புத்திசந்திரன் மீது மஞ்சூர் காவல் நிலையத்தில் ராஜு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் புத்திசந்திரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த புத்திசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் முன்ஜாமின் பெற்றார்.

இதனையடுத்து உதகை நிதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். பின்னர் தனது முன்ஜாமின் உத்தரவுடன் சிறிது நேரத்திலேயே புத்திசந்திரன் வெளியே வந்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பரவும் காய்ச்சல்: 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வா? – அமைச்சர் விளக்கம்

இந்த வார தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *