டெல்லி சென்றுள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 20) காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக நேற்று (செப்டம்பர் 19) இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தேர்தல் ஆணையத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும், அதன்பேரில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றிருப்பதாகவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவைவும் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து மோடியிடமும், அமித்ஷாவிடமும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச்சூழலில் இன்று காலை 11 மணிக்கு அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
4 முதலமைச்சர்கள் அல்ல: எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் பதில்!
எடப்பாடியின் திடீர் டெல்லி பயணம் : பின்னணி என்ன?