அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : எடப்பாடி அறிவிப்பு!

அரசியல்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக இன்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகப்‌பொதுச்‌ செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவர்‌, தமிழ்‌நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌, தலைமைக்‌ கழகம்‌, புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மாளிகையில்‌, வருகின்ற 5.7.2023, புதன்‌ கிழமை காலை 9 மணிக்கு, தலைமைக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ அனைத்து தலைமைக்‌ கழகச்‌ செயலாளர்களும்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்களும்‌ தவறாமல்‌ கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு – ஆளுநர் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில் தற்போது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

“அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் பின்பற்றவில்லை” – வில்சன் குற்றச்சாட்டு!

மணிப்பூர் முதல்வர் ராஜினாமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *