அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 25) நடைபெற உள்ளது.
அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார். மேலும் இது எனது தனிப்பட்ட கருத்து கிடையாது, கட்சியின் முடிவுதான் எனவும் உறுதியாக தெரிவித்திருந்தார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையோ, அதிமுக பாஜக இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை, அண்ணாமலைக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சினை இருக்கலாம் என்று சொன்னார்.
இதனிடையே கே.பி.முனுசாமி,நத்தம் விஸ்வநாதன்,, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், உள்ளிட்டோர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தான் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியைத் தொடரலாமா? அல்லது முறித்துக் கொள்ளலாமா? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோனிஷா
புரட்டாசி விரதம்: காசிமேடு மீனவர்கள் தவிப்பு!
ரஷ்யாவில் பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி!