அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் என தொடர்ச்சியாக கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று மாலை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் 4 மணி முதல் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆகியோர் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 4 மணிக்கும், முன்னாள் அமைச்சர்கள் சம்பத், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் 4.30 மணியளவிலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து மாலை 4.52 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் வந்தடைந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு அலுவலகத்திற்குள் சென்றார்.
தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பிக்பாஸ்: ஜோவிகாவிற்கு சீக்ரெட் மெசேஜ் அனுப்பிய வனிதா விஜயகுமார்?
உயர் கல்வியில் சில புதிய முயற்சிகள், முன்னெடுப்புகள்!