’ஏ’ டீம் திமுக ஜெயிப்பதற்காக ’பி’ டீம் அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’: அண்ணாமலை

Published On:

| By christopher

'ADMK did not contest by-elections to win DMK': Annamalai

‘ஏ டீம்’ திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் ‘பி டீம்’ என்ற அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 4) செய்தியாளர்களை சந்தித்தார்.

இடைத்தேர்தல் – அதிமுகவிற்கு பயம்!

அப்போது அவர், “இடைத் தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவினர் சார்ந்த இடங்களில் வேட்டி, சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு இடைத்தேர்தல் எவ்வாறு நடத்தப்படக் கூடாது என்பதற்கு  இலக்கணமாக விக்கிரவாண்டி உள்ளது. இதையும் தாண்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

தேர்தலில் ஒரு கட்சி போட்டியிட வேண்டும் என்றால் தைரியமாக அந்த கட்சி நிற்க வேண்டும். ஆனால் தேர்தலில் ஒதுங்கிக் கொண்ட ஒரு கட்சி, யாருக்கு ஓட்டு போடுங்கள், யாருக்கு ஓட்டு போடக் கூடாது என பிரச்சாரம் செய்வதை இன்று பார்க்கிறோம்.

தேர்தலில் 3வது அல்லது 4வது இடத்துக்கு வந்துவிடுவோம் என்று பயந்து தான் அதிமுக தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிக் கொண்டுள்ளது.

‘ஏ டீம்’ திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் ‘பி டீம்’ என்ற அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளது.

ஏன் உருது திணிப்பை எதிர்க்கவில்லை?

விஸ்வகர்மா யோஜனா பற்றி கற்றுத் தந்தால் அது குலக் கல்வி என திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் மீனவ பிள்ளைகளுக்கு கடல்சார் கல்வி குறித்து கற்று தந்தால் அது குலக் கல்வி இல்லையா? புதிய கல்விக் கொள்கை அறிவித்த பின்னர் தான் தமிழ் மொழியை பயிற்று மொழி என திமுக அரசு அறிவித்துள்ளது.

இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக ஏன் உருது திணிப்பை எதிர்க்கவில்லை? நீட் எதிர்ப்பை வைத்தே திமுகவினர் வண்டியை ஓட்டுகின்றனர். ஆனால் நீட் தேர்வால் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் பாஜக ஆதரவு அளித்துள்ளது.

விஜய் கருத்தால் பாஜக தனித்து நிற்கிறது!

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். அந்த வகையில் விஜய், அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன்.

திமுக எடுத்திருக்கும் நிலைப்பாட்டையே அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் எடுத்திருக்கின்றன. இதனால் பாஜக தமிழக அரசியலில் தனித்து நிற்கிறது. இதனால் எங்களுடைய வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.

அதே வேளையில் ஒரு சாதாரண மனிதனாக விஜயின் கருத்தை பார்த்தால் அது சரியில்லாத கருத்து. இன்னும் கொஞ்சம் அறிவியல்பூர்வ தரவுகளைப் பார்த்து அவர்கள் கருத்து சொன்னால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக நிர்வாகி கொலை.. உறவினர்கள் போராட்டம் : எடப்பாடி கண்டனம்!

இதனால்தான் சினிமாவை விட்டு விலகினேன்: மாளவிகா ஓபன் டாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share